ஆஸ்திரேலியாவில் எங்கும் நிலநடுக்கம் ஏற்படும் அபாயத்தை நிராகரிக்க முடியாது என்று புவியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அடிலெய்ட் – கான்பெர்ரா மற்றும் டார்வின் ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
டெக்டோனிக் தட்டு எல்லையில் அமைந்துள்ள இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியாவுக்கு அருகாமையில் இருப்பதால் டார்வின் அதிக ஆபத்தில் உள்ளது.
இருப்பினும், நியூசிலாந்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய நகரங்களை ஆபத்து சூழ்நிலையிலிருந்து விலக்க முடியாது என்று புவியியலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
மெல்பேர்ன் நகரில் 7 நாட்களில் 3 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதைக் கணக்கில் கொண்டு இந்தத் தரவு அறிக்கைகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.