Sportsஉலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்து ஜோஷ் ஹேசில்வுட் திடீர் விலகல்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்து ஜோஷ் ஹேசில்வுட் திடீர் விலகல்

-

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை மறுதினம் லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் இந்தியாவும், அவுஸ்திரேலியாவும் சம்பியன்ஷிப் கிண்ணத்திற்காக மோதவுள்ளன.

இந்திய அணியில் ரிஷப் பண்ட், பும்ரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோரை தான் நம்பி உள்ளது.

பந்துவீச்சில் ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக அணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் மைக்கேல் நெசர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இல்லாதது அவுஸ்திரேலியாவுக்கு சற்று பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Latest news

விலங்குகளுக்கு பதிலாக மனித இரத்தத்தை தேடும் கொசுக்கள்

கோடை காலத்தில் வெளியில் நேரத்தை செலவிடும் மக்களை கொசு தொல்லைகள் கடுமையாக பாதிக்கின்றன. பிரேசிலில் விஞ்ஞானிகள் நடத்திய டிஎன்ஏ பரிசோதனையில், விலங்குகளை விட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்க...

16 வயதுக்குட்பட்டவர்களின் 50,000 சமூக ஊடகக் கணக்குகளை நீக்குவதாக அரசாங்கம் உறுதி

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான சமூக ஊடகத் தடையின் முதல் வாரத்தில் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் அன்னிகா...

வெனிசுலாவின் விடுதலைக்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியா காட்டுத்தீயில் 228 வீடுகள் எரிந்து நாசம்

கடந்த வாரத்தில் விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 228 வீடுகள் உட்பட 700 கட்டிடங்களும், 400,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்களும் நாசமாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்...