கனமழை மற்றும் பலத்த காற்று குறித்து விக்டோரியா மாநில மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சில சமயங்களில் திடீர் வெள்ளம் கூட ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இதேவேளை, மின்னலுடன் கூடிய புயல் தென் அவுஸ்திரேலியாவை பாதிக்கலாம் என வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.
மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் டாஸ்மேனியாவில் பலத்த காற்று வீசக்கூடும்.
இருப்பினும் குயின்ஸ்லாந்தில் இன்று நல்ல வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.