வெற்றிலை, வாழைப்பழம், மாவு உள்ளிட்ட சில உணவுப் பொருட்களை இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு தனது சூட்கேஸில் கொண்டு வந்த நபருக்கு 5,500 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நபர் மே 16 ஆம் திகதி சிட்னி விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ள புதிய உயிரி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவ்வளவு அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதே வாரத்தில் பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமில் இருந்து பிரிஸ்பேன் மற்றும் மெல்பேர்னுக்கு வந்த 3 விமானப் பயணிகளும் தாவர உதிரிபாகங்களை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த 4 பயணிகளுக்கும் மொத்தமாக 22,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல், ஆஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்பு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன, அதன் படி, தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருபவர்கள் அல்லது கொண்டு வரப்பட்ட பொருட்களை அறிவிக்காதவர்களுக்கு $5,500 அபராதம் விதிக்கப்படும்.