உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் தலைவரான புனித பாப்பரசர் பிரான்சிஸ் (வயது 86), சமீப காலமாக கடுமையான வலியாலும், குடல் அடைப்புகளாலும் அவதிப்பட்டு வந்தார்.
அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் 2 தினங்களுக்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.
அப்போது அவர் குடல் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
அதன்பேரில் நேற்று முன்தினம் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, குடல் இறக்கத்தை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சை 3 மணி நேரம் இடம்பெற்றுள்ளது.புனித பாப்பரசருக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது.
அவருக்கு எந்தச் சிக்கலும் இல்லை. வேறு நோய் எதுவும் கண்டறியப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி தமிழன்