Cinemaஇராமாயணம் படத்தில் இராவணனாக கே.ஜி.எப். புகழ் யாஷ்

இராமாயணம் படத்தில் இராவணனாக கே.ஜி.எப். புகழ் யாஷ்

-

திரைப்பட இயக்குநர் நித்தேஷ் திவாரியின் இராமாயணம் படத்தில் இராமர் மற்றும் சீதை வேடங்களில் உண்மையான ஜோடியான, இந்தி திரைப்பட நடிகர்களான ஆலியா பட் மற்றும் அவரது கணவர் ரன்பீர் கபூர் ஆகியோரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

நடிகை ஆலியா பட், 2022 ஆம் ஆண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தில் முன்பே சீதை வேடம் ஏற்று நடித்துள்ளார்.

இதேபோன்று இராமாயணம் படத்தில், இராவணன் வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சுவார்த்தையில், கே.ஜி.எப். பட புகழ் நடிகர் யாஷ் பெயர் அடிபடுகின்றது.

இதுபற்றி கிடைத்த தகவலின்படி, படத்தில் முதல் தேர்வாக ஆலியா பட் உள்ளார். எனினும், படப்பிடிப்புக்கான சரியான திகதிகள் பல காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், படம் உருவாவதற்கு நீண்டகாலம் தாமதம் ஏற்படும் சூழலில், இயக்குனர் மது மந்தனா மற்றும் நித்தேஷ் இருவரும் தங்களது முதல் தேர்வில் உறுதியாக இருப்பது என முடிவு செய்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...