அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிளாயுவா எரிமலை வெடித்துச் சிதறி நெருப்புக் குழம்பைக் கக்கி வருகிறது.
உலகில் எந்நேரமும் சீற்றத்துடன் காணப்படும் எரிமலைகளில் கிளாயுவா எரிமலையும் ஒன்று. 2019ஆம் ஆண்டு அந்த எரிமலை வெடித்தபோது ஏராளமான வீடுகள் பலத்த சேதத்துக்குள்ளாகின.
கடைசியாக கடந்த ஜனவரி மாதம் கிளாயுவா எரிமலை வெடித்துச் சிதறியது. அதன்பிறகு சீற்றம் தணிந்து காணப்பட்ட எரிமலை மீண்டும் தற்போது வெடித்துச் சிதறி வருகிறது. இதனால் எரிமலை இருக்கும் பகுதி தீப்பிழம்பாகக் காட்சியளிக்கிறது.
நன்றி தமிழன்

