Newsபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 'பிரிக்கப்படாத இந்தியா' சுவரோவியம்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘பிரிக்கப்படாத இந்தியா’ சுவரோவியம்

-

இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ‘பிரிக்கப்படாத இந்தியா’வை சித்தரிக்கும் சுவரோவியம் தொடர்பாக பல்வேறு நாடுகளும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

இந்திய தலைநகர் புது டெல்லியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டடத் தொகுதியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாத இறுதியில் திறந்து வைத்தார்..

இந்த புதிய கட்டடத்தில் ‘பிரிக்கப்படாத இந்தியாவை’ காட்சிப்படுத்தும் ஒரு சுவரோவியம் உள்ளமை தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரிக்கப்படாத இந்தியா சுவரோவியம் மேற்கில் ஆப்கானிஸ்தானிலிருந்து, பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவுகள், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை வரை இந்தியாவின் ஒரு பகுதியாக விரிந்துள்ளதாக காட்டுகிறது.

இந்த சுவரோவியம் பண்டைய மௌரிய பேரரசைக் காட்டுவதாகவும் அது ‘மக்கள் சார்ந்த’ ஆட்சியின் செழிப்பான காலத்தை பிரதிபலிப்பதாகவும் இந்திய அரசாங்கத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த சுவரோவியத்துடன் எவ்வித அரசியல் தொடர்பும் இல்லை என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

கத்திகளை அகற்றுவதற்கான சலுகை காலத்தை அறிவித்தார் Machete

விக்டோரியா அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒரு எச்சரிக்கை உள்ளது, இதன் மூலம் கத்தியை வைத்திருப்பது, எடுத்துச் செல்வது அல்லது வாங்குவது சட்டவிரோதமானது. இந்த...

YouTube-இல் சாதனை படைத்துள்ளார் MrBeast

YouTuber MrBeast, 400 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று, Play பட்டனை அடைந்த உலகின் முதல் YouTuber என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதை YouTube தலைமை நிர்வாக அதிகாரி...

100 ஆசிரியர் அல்லாத வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ள NSW மாநிலம்

TAFE NSW நிறுவனத்தில் இருந்து சுமார் 100 ஆசிரியர் அல்லாத வேலைகளை நீக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வாரம் நியூ சவுத் வேல்ஸிற்கான போக்குவரத்து கிட்டத்தட்ட 1,000...

NSW-வில் ஏற்பட்ட விமான விபத்தில் ஒருவர் பலி

தென்மேற்கு நியூ சவுத் வேல்ஸில் நடந்த விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.  புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில், ஹேயிலிருந்து மேற்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள...

NSW-வில் ஏற்பட்ட விமான விபத்தில் ஒருவர் பலி

தென்மேற்கு நியூ சவுத் வேல்ஸில் நடந்த விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.  புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில், ஹேயிலிருந்து மேற்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள...

சிட்னி பொதுப் போக்குவரத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள கட்டணமில்லா நேரங்கள்

போக்குவரத்துத் தலைவர்கள் சிட்னி மற்றும் பிராந்திய வழித்தடங்களில் கட்டணமில்லா ரயில் பயணத்தை 54 மணிநேரமாக நீட்டித்துள்ளனர். பல மாதங்களாக போக்குவரத்து நெரிசல் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்குப் பிறகு,...