Newsஉலகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து - வெளியான அதிர்ச்சி தகவல்

உலகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்

-

அமெரிக்காவில் El Nino பருவநிலை மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வானிலை ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கையில்,

El Nino பருவம் தென் அமெரிக்காவின் கரைக்கு அருகில் கிழக்கு பசிபிக் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக வெதுவெதுப்பான நீரிலிருந்து ஏற்படுகிறது.

இந்த வானிலைப் பருவம் சில இடங்களில் அதிக மழைப்பொழிவையும் மற்ற பகுதிகளில் வறட்சியையும் ஏற்படுத்தும் ,பதிவு செய்யப்பட்டுள்ள வெப்பமான ஆண்டுகளில் பெரும்பாலானவை El Nino வின் போது நிகழ்ந்தவையாகும்.

2016 இல் El Nino பருவநிலை மாற்றம் ஏற்பட்டதால் உலகில் முன்னெப்போதும் இல்லாத அளவு வெப்பம் உயர்ந்தது.

மீண்டும் அத்தகைய சூழல் தொடர்வதால் உலகில் முன்னைக்காட்டிலும் கடுமையான வெப்பம் பதிவாகலாம் வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாதிக்கப்படும் நிலையில் உள்ள நாடுகள் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. El Nino வின் தாக்கத்தை எதிர்கொள்ளவும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் தென் அமெரிக்க நாடான பெரு ஒரு பில்லியன் டொலருக்கு மேல் ஒதுக்கியுள்ளது.

பிலிப்பைன்சில் நிலைமையைச் சமாளிக்கும் வழிகளை ஆராயச் சிறப்புக் குழுவை நியமித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் பள்ளி அருகே ஒருவரை சுட்டுக் கொன்ற போலீசார்

விக்டோரியாவின் Geelong-இல் உள்ள Newtown-இல் உள்ள Matthew Flinders பெண்கள் மேல்நிலைக் கல்லூரி அருகே ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு காரைத் திருடும்போது ஒருவர் சுடப்பட்டார். கடத்தல்...

இரு நுரையீரல்களும் இல்லாமல் 48 மணி நேரம் வாழ்ந்த மனிதன்

அமெரிக்காவில் ஒரு வெற்றிகரமான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு நுரையீரல்களும் அகற்றப்பட்ட பிறகும் 48 மணி நேரம் உயிருடன் இருந்த...

பூமியைப் போன்ற புதிய கிரகத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்

பூமியைப் போலவே உயிரினங்கள் வாழக்கூடியதாக சந்தேகிக்கப்படும் ஒரு புதிய கிரகத்தை ஆஸ்திரேலிய வானியலாளர்கள் குழு அடையாளம் கண்டுள்ளது. இது 150 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு...

அரசு மருத்துவமனைகளுக்கு 25 பில்லியன் டாலர்களை அறிவித்த பிரதமர்

ஆஸ்திரேலியாவின் பொது மருத்துவமனைகளுக்கு கூடுதலாக 25 பில்லியன் டாலர் நிதியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொது மருத்துவமனைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே...

பிரிஸ்பேர்ண் துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி

பிரிஸ்பேர்ண் துறைமுகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் புல்டோசர் விபத்தில் உயிரிழந்துள்ளார். துறைமுக வளாகத்தில் இயங்கி வந்த இரண்டு புல்டோசர்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து...

அரசு மருத்துவமனைகளுக்கு 25 பில்லியன் டாலர்களை அறிவித்த பிரதமர்

ஆஸ்திரேலியாவின் பொது மருத்துவமனைகளுக்கு கூடுதலாக 25 பில்லியன் டாலர் நிதியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொது மருத்துவமனைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே...