18 வயதுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்களில் 41 சதவீதம் பேர் 15 வயதிற்குப் பிறகு உடல் ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 43 சதவீத ஆண்களும், 39 சதவீத பெண்களும் இத்தகைய வன்முறைக்கு ஆளாகின்றனர்.
2021-2022 காலகட்டத்தில் 12,000 ஆஸ்திரேலியர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
1/5 பெண்களும் 1/16 ஆண்களும் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாகக் கூறப்படுகிறது.
மேலும், 1/3 பெண்களும், 2/5 ஆண்களும் உடல் ரீதியான வன்முறைக்கு ஆளாகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.
2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆண், பெண் இருபாலருக்கும் எதிரான வன்முறை வீதங்கள் குறைந்துள்ளதாக புள்ளிவிபரப் பணியகம் தெரிவித்துள்ளது.