ஆளும் தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் மிச்சேல் ஆனந்தராஜா பகிரங்கமாக வெளியிட்ட அறிக்கை பொய்யானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 122,000 வீடற்ற மக்கள் இரவில் தெருக்களில் தூங்குகிறார்கள் என்று கூறியிருந்தார்.
அவர்களில் 85 வீதமானவர்கள் பெண்கள் – ஒவ்வொரு 07 பேரில் ஒருவர் 12 வயதுக்குட்பட்ட குழந்தை என்றும் தொழிலாளர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி மிச்சேல் ஆனந்தராஜா தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, வீடு இல்லாமல் வீதியில் உறங்கிக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையை எம்.பி பயன்படுத்தியுள்ளதாக ஊடக அமைப்பு ஒன்று நடத்திய உண்மைச் சோதனையின் போது தெரியவந்துள்ளது.
122,494 என்பது உண்மைதான், ஆனால் வீடற்றவர்களின் எண்ணிக்கை 7,636 என்பதும் தெரியவந்துள்ளது.
இந்தக் குழுவில் பெரும்பான்மையானவர்கள் அல்லது கிட்டத்தட்ட 57 வீதமானவர்கள் ஆண்கள் எனவும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வீதம் 03 வீதமாக குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.