Newsரஷ்யாவின் புதிய அறிவிப்பு - பாபா வங்காவின் கணிப்பு உண்மையாக போகின்றதா?

ரஷ்யாவின் புதிய அறிவிப்பு – பாபா வங்காவின் கணிப்பு உண்மையாக போகின்றதா?

-

உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் ஜனாதிபதியுடன், ரஷ்யா ஜனாதிபதி ஆலோசனை நடத்தினார்.

பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை வைப்பதற்கான கட்டமைப்புகள் ஜூலை மாத தொடக்கத்தில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் ரஷ்ய அணு ஆயுதங்கள் பெலாரஸ் நாட்டிற்கு வழங்கப்படும் என ரஷ்யா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் இந்த அறிவிப்பு உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் உக்ரைன் உள்ளிட்ட அதன் ஆதரவு நாடுகள் ரஷ்ய ஜனாதிபதியின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதியின் இந்த அணு ஆயுத அச்சுறுத்தல் பாபா வங்காவின் கணிப்பை நினைவுபடுத்தியுள்ளது.

அதாவது 2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய நாடு ஒன்று மக்கள் மீது அணு ஆயுத போரை மேற்கொள்ளும் என்றும், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபா வங்காவின் கணிப்புகள் இரட்டை கோபுர தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது, செர்னோபில் பேரழிவு, இளவரசி டயானா மரணம், 2004 சுனாமி பேரலைகள், ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணம், உலகையே ஆட்டி படைத்த கொரோனா என அனைத்தும் பலித்துள்ளதாக கூறப்படுகிறது.

பாபா வங்காவின் கணிப்புகள் அனைத்தும் நிறைவேறியதால் அணு ஆயுத விஷயத்திலும் அது நடந்துவிடுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...