அவுஸ்திரேலியாவின் முன்னணி வர்த்தக நிறுவனங்களின் CEO க்கள் கடந்த ஆண்டில் 15 சதவீத சம்பள உயர்வைப் பெற்றுள்ளனர்.
1,167 தனியார், பொது மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பள அதிகரிப்பு பொதுவாக பணவீக்கம் தொடர்பில் வழங்கப்படுகின்ற போதிலும், இந்த சம்பள அதிகரிப்பு பணவீக்க பெறுமதியை விட 3 மடங்குக்கு அண்மித்துள்ளமை கவனம் செலுத்தப்பட்ட ஒரு முக்கிய விடயமாகும்.
அவுஸ்திரேலியாவின் முன்னணி 200 நிறுவனங்களின் தலைவர்கள் ஏறக்குறைய 19 சதவீத சம்பள அதிகரிப்பை பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஜூலை 1 முதல், ஆஸ்திரேலியாவின் குறைந்தபட்ச ஊதியம் தற்போதைய $21.38ல் இருந்து $23.23 ஆக உயர்த்தப்படும்.