Breaking News2 இதயம், 4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் பிறந்த...

2 இதயம், 4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் பிறந்த அதிசய குழந்தை

-

இந்தியாவின் பீகார் மாநிலம், சாப் ராவை அடுத்த ஷியாம்சாக் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான பிரசுதா பிரியா தேவியை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு வைத்தியர்கள் பிரசவம் பார்த்தனர்.

இதில் அந்த பெண், அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த வைத்தியர்கள் ஆச்சரியம் அடைந்தனர். காரணம் அந்த குழந்தைக்கு 4 கால்கள், 4 கைகள், 4 காதுகள் மற்றும் 2 முதுகுகள் இருந்தன. இதுபோல குழந்தையின் உடலை பரிசோதித்தபோது, குழந்தைக்கு 2 இதயங்களும் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த குழந்தையை வைத்தியர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்தனர். என்றாலும் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பிறந்த 20 நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதற்கிடையே இரண்டு இதயம் மற்றும் 4 கால், கைகளுடன் பிறந்த குழந்தை பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை பார்த்த மக்கள், அந்த குழந்தை கடவுளின் குழந்தை என்றும், அதனை பார்க்க வேண்டும் என்றும் கருத்து பதிவிட்டனர். இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து அந்த குழந்தை பிறந்த வைத்தியசாலை முன்பு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் குழந்தை இறந்த தகவலை வைத்தியர்கள் தெரிவித்த பின்னர், அங்கு திரண்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

நன்றி தமிழன்

Latest news

NSW-வில் வரலாறு காணாத அளவு பனிப்பொழிவுடன் ஆலங்கட்டி மழை

வடக்கு நியூ சவுத் வேல்ஸ் நகரத்தை பனியால் மூடியிருந்த ஆலங்கட்டி மழை குளிர்காலத்தில் ஒரு அசாதாரண நிகழ்வாகும் என்று வானிலை ஆய்வு மையம் (BOM) தெரிவித்துள்ளது. புதன்கிழமை...

சதுரங்க ஜாம்பவானை தோற்கடித்த பத்து வயது சிறுமி

பிரிட்டனைச் சேர்ந்த 10 வயது போதனா சிவானந்தன் (Bodhana Sivanandan), கிராண்ட்மாஸ்டரை தோற்கடித்த இளைய சதுரங்க வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 2025 பிரிட்டிஷ் சதுரங்க சாம்பியன்ஷிப்பின்...

தனது திருமணம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார் பிரதமர் அந்தோணி அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது திருமணம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். தனது திருமணம் அரசியல் இல்லாத ஒரு சிறிய விழாவாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அல்பானீஸ்...

கொலைக் குற்றச்சாட்டில் இருந்து 16 வயது சிறுவன் விடுதலை

ஒரு கொலை வழக்கு விசாரணையின் போது தவறான AI ஆவணங்களை தாக்கல் செய்ததற்காக வழக்கறிஞர்களை ஒரு நீதிபதி கண்டித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு Abbotsford-ல் 41 வயது...