Cinemaகதாநாயகனாக அறிமுகமாகும் லியோனியின் மகன்

கதாநாயகனாக அறிமுகமாகும் லியோனியின் மகன்

-

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் நாயகனாக அறிமுகமாகும் ‘அழகிய கண்ணே’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘அழகிய கண்ணே’. எஸ்தெல் எண்டர்டெய்னர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சீனு ராமசாமியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஆர்.விஜயகுமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி இப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் லியோனி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் லியோனி பேசியதாவது: “விஜய் சேதுபதிக்கு எனது மிகப்பெரிய நன்றி. நான் கேட்டதும் உடனே சரி என்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்தார். என் மகன் என்பதற்காகச் சொல்லவில்லை கொஞ்சம் சிரமப்பட்டுதான் இந்த படத்தில் நடித்தார்.

பல முயற்சிகள் செய்தார். அவர் உழைப்புக்கு இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்”. என தெரிவித்தார்.

நன்றி தமிழன்

Latest news

உக்ரைனில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த ஆஸ்திரேலியர் உயிரிழப்பு

உக்ரைனில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் ஒருவரும் முன்னாள் ராணுவ வீரருமான ஆஸ்திரேலிய நபர் ஒருவர் உயிரிழந்தார். அவர் Prevail Together board...

விக்டோரியாவில் பழங்குடி பாறையை நாசமாக்கிய Graffiti கலைஞர்கள்

விக்டோரியாவில் உள்ள கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடமான Paradise நீர்வீழ்ச்சியில் உள்ள ஒரு பாறைச் சுவரில் ஒரு குழு சட்டவிரோதமாக Graffiti ஓவியத்தை வரைந்துள்ளது. Paradise நீர்வீழ்ச்சி...

யாழ்ப்பாணம், மட்டகளப்பில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி...

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்தினார் பிரதமர் 

தொழிற்கட்சியின் மகத்தான தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது புதிய அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார். இந்த மறுசீரமைப்பின் பெரிய வெற்றியாளர்களில் ஒருவராக Michelle Rowland உருவெடுத்துள்ளார்....

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...