Newsசர்வதேச விண்வெளியில் மலர்ந்த பூவின் புகைப்படத்தை வெளியிட்ட நாசா

சர்வதேச விண்வெளியில் மலர்ந்த பூவின் புகைப்படத்தை வெளியிட்ட நாசா

-

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ தனது சமூக வலைதள பக்கத்தில் அண்மையில் வெளியிட்ட பதிவு ஒன்றில் விண்வெளியில் மலர்ந்த ‘ஸின்னியா’ பூவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இந்த பூச்செடி சர்வதேச விண்வெளி நிலையத்தில் வைத்து வளர்க்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளியில் செடிகளை வளர்ப்பது தொடர்பாக 1970 ஆம் ஆண்டில் இருந்தே விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தற்போது நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும் பூச்செடியை 2015 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் ஜெல் லிண்ட்கிரென் வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.

விண்வெளி ஆய்வின் ஒரு பகுதியாக இந்த செடி வளர்ப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.

பூமியின் சுற்றுப்பாதையில் தாவரங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் ஆய்வு செய்வதன் மூலம், விண்வெளியில் பயிர்களை எவ்வாறு வளர்ப்பது என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்றும், நீண்ட கால விண்வெளி பயணங்களில் புதிய உணவு ஆதாரங்களை உருவாக்க முடியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

மேலும் நாசா விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கீரை, தக்காளி, மிளகு போன்றவற்றையும் மற்ற காய்கறிகளுடன் பயிரிட்டுள்ளனர் என்றும், இன்னும் ஏராளமான தாவரங்கள் வளர்க்கப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஸ்மார்ட்போன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியர்கள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் மன நலனுக்காக முக்கியமான முடிவுகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு 'Digital Detox'...

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் நிர்வாணமாக இருப்பது தவறா?

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பொது இடங்களில் நிர்வாணம் தடைசெய்யப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் சில கடற்கரைகளில் இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்த நிர்வாண கடற்கரை கலாச்சாரத்தின் (Naturism) பின்னணியில்...

2026 இல் வட்டி விகித நிவாரணம் கிடைக்குமா?

2026 ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அடமானதாரர்களிடையே வட்டி விகிதங்கள் குறித்த அவநம்பிக்கை மற்றும் பதட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு,...

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகங்களைத் தடையை பின்பற்றும் பிரான்ஸ்

ஆஸ்திரேலியா சமீபத்தில் அமல்படுத்திய சமூக ஊடகத் தடையைப் போன்ற ஒரு சட்டத்தை அமல்படுத்த பிரெஞ்சு அரசாங்கமும் தயாராகி வருகிறது. அதன்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப்...

Bondi தாக்குதல் விசாரணையில் பிரதமரின் முடிவு

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்ற அதிகரித்து வரும் கோரிக்கைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நிராகரித்துள்ளார். மனித உரிமைகள் ஆணையர்...

புத்தாண்டு தினத்தன்று மெல்பேர்ணில் ஒரு கத்திக்குத்து

மெல்பேர்ணில் உள்ள லைகான் தெருவில் புத்தாண்டு தினத்தன்று நடந்த தாக்குதலில் இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார்ல்டன் பகுதியில் உள்ள ஆர்கைல் தெரு அருகே உள்ள...