தொடர்ந்து 2 காலாண்டுகளாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட சரிவால் நியூசிலாந்து பொருளாதார மந்தநிலையை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் பொருளாதாரம் 0.7 சதவீதமும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதமும் சுருங்கியதாக அந்நாட்டின் புள்ளியியல் துறை இன்று அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் நியூசிலாந்தை பாதித்த இயற்கை அனர்த்தங்களே இதற்கு முதன்மையான காரணங்களாகும்.
எந்தவொரு நாட்டின் பொருளாதாரமும் தொடர்ந்து 02 காலாண்டுகளுக்கு வீழ்ச்சியடைந்தால், அது பொருளாதார மந்தநிலையாக கருதப்படுகிறது.