இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள தெற்கு ஆஸ்திரேலிய மாநில வரவு செலவுத் திட்டத்தில் 249 மில்லியன் டாலர்கள் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த டிசம்பரில், மாநில அரசு பட்ஜெட் உபரியாக 200 மில்லியன் டாலர்களை பதிவு செய்யும் என்று கணிக்கப்பட்டது.
ஆனால் தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் வெள்ளம், கூடுதல் சுகாதார செலவுகள் மற்றும் பிற எதிர்பாராத செலவுகளை எதிர்கொண்டு பட்ஜெட் பற்றாக்குறையை பதிவு செய்ய வேண்டியிருந்தது.
இதேவேளை, எரிசக்தி கட்டணங்களுக்கான நிவாரணம் மற்றும் ஆம்புலன்ஸ் காலதாமதத்தை தடுப்பதற்கான மேலதிக ஏற்பாடுகளும் இன்றைய வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய பட்ஜெட்டில் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கப்படும்.