Melbourne’s Crown Casino வரி செலுத்துவதில் தவறான கணக்கீடு செய்ததற்காக மேலும் $20 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 02 வருடங்கள் தொடர்பில் விக்டோரியாவின் சூதாட்டம் மற்றும் கசினோ ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் சமீபத்தில் கிரவுன் கேசினோ மீது விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை கிட்டத்தட்ட 450 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
விக்டோரியா மாநில அரசு அதிக அளவு வரி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரவுன் கேசினோவில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க ராயல் கமிஷனையும் மத்திய அரசு நியமித்துள்ளது.