Sportsஉலக கிண்ண கிரிக்கெட் தகுதி சுற்று போட்டி இன்று ஆரம்பம்

உலக கிண்ண கிரிக்கெட் தகுதி சுற்று போட்டி இன்று ஆரம்பம்

-

13-வது 50 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகின்ற ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் இடம்பெறவுள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு ஒருநாள் உலக கிண்ண சுப்பர் லீக் போட்டிகள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்த நியூசிலாந்து, இங்கிலாந்து, பங்காளதேஷ், இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

எஞ்சிய 2 அணிகள் எவை? என்பதை நிர்ணயிப்பதற்தான 50 ஓவர் உலக கிண்ண தகுதி சுற்று போட்டி சிம்பாப்சிம்பாப்பேயில் இன்று (18) முதல் ஜூலை 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தொடக்க நாளான இன்று ஹராரேயில் இரண்டு லீக் போட்டிகள் நடக்கின்றன.

இதில் ஒரு போட்டியிலட கிரேக் எர்வின் தலைமையிலான சிம்பாப்பே அணி, ரோகித் பாடெல் தலைமையிலான நேபாள அணியை எதிர்கொள்கிறது.

மற்றொரு போட்டியில் ஷாய் ஹோப் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி, மோனாங்க் படேல் தலைமையிலான அமெரிக்க அணியை சந்திக்கிறது.

இந்த அணிகள் ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

இந்த போட்டி பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

நன்றி தமிழன்

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...