Newsஉலக அளவில் உணவு பாதுகாப்பில் பாதிப்பு - ஐ.நா கவலை

உலக அளவில் உணவு பாதுகாப்பில் பாதிப்பு – ஐ.நா கவலை

-

உக்ரைன் அணை தகர்ப்பு எதிரொலியால் உலக அளவில் உணவு பாதுகாப்பில் பாதிப்பு ஏற்படலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையான கக்கோவ்காவை ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்ததாக சில நாட்களுக்கு முன்பு குற்றச்சாட்டப்பட்டது.

அணையிலிருந்து பெருமளவு தண்ணீர் வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர். அணை தகர்ப்பு தொடர்பாக ரஷ்யா – உக்ரைன் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், உக்ரைன் அணை தகர்ப்பு நிகழ்வால் உலக அளவில் உணவுப் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா. உதவித் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் தெரிவிக்கையில்,

அப்பகுதி உலகின் மையமாக இருந்தது. கிரீமியாவுக்கு மட்டும் மல்ல, உலகிற்கு மையமாக இருந்தது. உணவுப் பாதுகாப்பில் நாம் ஏற்கெனவே சிரமத்தில் இருக்கிறோம். இதன் காரணமாக உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை நிச்சயமாக அதிகரிக்கும்.

அடுத்த அறுவடைக்கு அறுவடை செய்வதிலும், விதைப்பதிலும் மிகப் பெரிய பிரச்சனைகளை நாம் காணப்போவது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாதது. நிச்சயம் உலகளாவிய உணவுப் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுதான் நடக்கப் போகின்றது என தெரிவித்தார்.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்காவின் தேசிய பறவையாக வெண்தலைக் கழுகு தேர்வு

அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூா்வமாக அறிவிக்கும் மசோதாவில் ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டு உறுதி செய்தாா். வெண்தலைக் கழுகுகள் அறிவியல் ரீதியாக “ஹாலியேட்டஸ் லுகோசெபாலஸ்”...

முதல் முறையாக வெளிநாடு செல்லும் காதலர்களுக்கான அறிவுரை

மனைவியுடன் முதல்முறையாக வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிடுபவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தொடர் வழிகாட்டிகளை 'சிஎன் டிராவலர்' வெளியிட்டுள்ளது என்பதும் சிறப்பு. அதன்படி, அவர்கள் தங்களது முதல் வெளிநாட்டுப்...

விக்டோரியாவில் உள்ள நீரில் கண்டறியப்பட்டுள்ள ஒரு அசாதாரண வைரஸ்

விக்டோரியாவில், எங்கள் நீரில் ஒரு அசாதாரண வைரஸ் போக்கு ஏற்பட்டதை அடுத்து, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் நடத்தப்பட்ட வழக்கமான கழிவுநீர் மாதிரி சோதனையின் போது இது...

பளு தூக்குதல் போட்டியில் கலந்துகொண்ட 90 வயது பெண்

தைவானின் தைபே நகரில் நடைபெற்ற 70 வயதுக்கு மேற்பட்ட பளுதூக்கும் போட்டியில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி பங்கேற்றுள்ளார். மூன்று சுற்று போட்டியின் போது,...

பளு தூக்குதல் போட்டியில் கலந்துகொண்ட 90 வயது பெண்

தைவானின் தைபே நகரில் நடைபெற்ற 70 வயதுக்கு மேற்பட்ட பளுதூக்கும் போட்டியில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி பங்கேற்றுள்ளார். மூன்று சுற்று போட்டியின் போது,...

சாதனை படைத்தது MCG-யின் முதல் நாள் வசூல்

மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) 26ம் திகதி தொடங்கிய Boxing Day டெஸ்ட் போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். அதன்படி, முதல் நாளில் Boxing Day...