Cinemaவிஜய் கூறிய அசூரன் பட வசனம்

விஜய் கூறிய அசூரன் பட வசனம்

-

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று இடம்பெற்றது.

சென்னை நீலாங்கரையில் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் விஜய் பேசியது பலரின் கவனத்தை ஈர்த்தது. அதில், சமீபத்தில் ஒரு படத்தில் ஒரு அழகான வசனம் நான் கேட்டேன். கார்டு இருந்தால் எடுத்துகிடுவானுங்க, ரூபா இருந்தா பிடுங்கிடுவானுங்க, ஆனா படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து எடுத்துக்கொள்ளவே முடியாது என்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசூரன் பட வசனத்தை விஜய் பேசியிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறனிடம், அசூரன் படத்தில் இடம்பெற்ற வசனத்தை நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் பேசியிருந்தார்,

இதனை எவ்வளவு முக்கியமானதாக நீங்கள் பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது?

இதற்கு வெற்றிமாறன் அளித்த பதில், ஒரு சினிமாவில் நாம் சொல்கின்ற ஒரு விஷயம், சமூகத்துல மிக முக்கியமான ஒரு நபரிடம் சென்றடையும் பொழுது அதனுடைய தாக்கம் என்னவாக இருக்கும் என்பதற்கான ஒரு மிக பெரிய உதாரணம் தான் இது.

மேலும் அம்பேத்கர், பெரியாரை படிக்க வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார் என்ற கேள்விக்கு, அந்த மேடையில் அவர் சொன்னது, அனைவரும் அவர்களை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே. அம்பேத்கர், பெரியார், காமராஜர் மற்றும் அண்ணாவையும் படிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறினார் ஈரானிய தூதர்

ஆஸ்திரேலியாவுக்கான ஈரானிய தூதர் Ahmad Sadeghi, கான்பெராவில் உள்ள தூதரகத்தின் முன் ஊடகங்களுக்கு, "நான் ஆஸ்திரேலிய மக்களை நேசிக்கிறேன்" என்று கூறி அனைவருக்கும் விடைபெற்றுள்ளார். ஆனால் ஆஸ்திரேலிய...

வார இறுதியில் விக்டோரியாவில் பனிப்புயல் ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கில் ஒரு பெரிய பனிப்புயல் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த குளிர்காலத்தில் ஏற்படும் மிகப்பெரிய பனிப்புயலாக இது...

ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு

ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) ஒரு வருடத்தில் அதன் அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. ஒரு மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு 1.9% இலிருந்து 2.8% ஆக...

கிழக்கு கடற்கரையிலிருந்து ஐரோப்பாவிற்கு விரைவில் விமானங்கள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய விமான நிறுவனமான Qantas, நிகர லாபத்தில் 28% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் நிகர லாபம் $2.4 பில்லியனாக உயர்ந்துள்ளதாகவும், நிறுவனத்தின் வருவாய்...

IPL போட்டியில் இருந்து ஓய்வு பெறும் அஸ்வின் ரவிச்சந்திரன்

சர்வதேச கிரிக்கெட்டை தொடர்ந்து IPL போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அவுஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒவ்வாமை விகிதங்கள்

ஆஸ்திரேலியர்களில் மூன்றில் ஒருவர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் $18.9 பில்லியன் நிதி இழப்புகளையும், $44.6 பில்லியன் நிதி சாராத தாக்கங்களையும் சந்திக்கின்றனர் என்று ஒரு...