ஒரே நேரத்தில் 60 நாட்களுக்கு தேவையான மருந்துகளை கொள்முதல் செய்யும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்திருத்தத்தால், பல மருந்து கடைகளில் கடும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தொலைதூரப் பகுதிகளில் இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக மருந்தக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த சூழ்நிலையால், பார்மசி துறையில் வேலை வாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரணம், மருந்து தட்டுப்பாடு காரணமாக சில மருந்தகங்களை மூடும் பணியில் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலைமை சுமார் 20,000 வேலைகளை பாதிக்கும் என்றும் எச்சரிக்கைகள் உள்ளன.