நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள கசினோ அரங்குகளில் இருந்து அறவிடப்படும் வரிகளை ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிப்பதற்கான பிரேரணையை நடைமுறைப்படுத்துவது ஒரு மாதம் தாமதமாகியுள்ளது.
புதிய வரி சதவீதங்களுக்கு உரிய அதிகாரிகள் இதுவரை ஒப்புதல் அளிக்காததே இதற்குக் காரணம்.
புதிய வரித் திருத்தத்தின் முக்கிய நோக்கம், 03 வருட காலப்பகுதிக்குள் பிரதான கசினோ அரங்குகளான கிரவுன் மற்றும் ஸ்டார் ஆகியவற்றிலிருந்து 364 மில்லியன் டொலர்களை வரித் தொகையாகப் பெறுவதாகும்.
எவ்வாறாயினும், கசினோ அரங்குகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு வரி வசூலிப்பதன் மூலம் குறையலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.