Newsபூமி தொடர்பில் விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பூமி தொடர்பில் விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

-

பூமியில் இருந்து மனிதர்களால் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் நாம் வாழும் பூமி 1993 மற்றும் 2010 ஆண்டுகளுக்கு இடையில் கிட்டத்தட்ட 80 சென்றிமீற்றர் கிழாக சாய்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக பூமியின் காலநிலையில் பெரிய பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சி தகவலில் 1993 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை மட்டும் 2,150 ஜிகா டன் நிலத்தடி நீர் மனிதர்களால் உறிஞ்சப்ப்ட்டுள்ளது.

இது 6 மில்லிமீற்றக்கும் அதிகமான கடல் மட்ட உயர்வுக்கு சமம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் குறைவது பூமியின் சுழற்சியை மாற்றுவதாக 2016 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தற்போதுவரை இந்த சுழற்சி மாற்றங்களுக்கு நிலத்தடி நீரின் குறிப்பிட்ட பங்களிப்பு ஆராயப்படவில்லை. 1993 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில், மேற்கு வட அமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்தியா ஆகிய நாடுகளில், மத்திய அட்சரேகைகளில் அதிகளவு நீர் மறுபகிர்வு செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

பூமியின் சுழற்சி பெரிதும் மாறியுள்ளதாகவும். இதன் மூலம் பூமியின் பல்வேறு பகுதியில் காலநிலையில் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு நிலத்தடி நீர்மட்டம் குறைவு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்த முழுமையான தரவுகள் இல்லை எனவும் ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலத்தடி நீர்மட்டம் குறைவதை தடுக்க பல்வேறு நாடுகள் பல திட்டங்களை தீட்டுவதன் மூலம் பூமியின் சுழற்சி மாற்றத்தை மாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் சுழற்சி துருவமானது பொதுவாக ஒரு வருடத்திற்குள் பல மீற்றர்கள் மாறுவதால் நிலத்தடி எடுப்பதன் காரணமாக ஏற்படும் மாற்றங்கள் பருவங்களை மாற்றுவதற்கான எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

அமெரிக்காவும் சீனாவும் வரி குறைப்புக்கு ஒப்புக்கொண்டன!

அமெரிக்காவும் சீனாவும் 90 நாள் கட்டண இடைவெளிக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு தரப்பினரும் விதிக்கும் கட்டணங்களைக் குறைத்துள்ளன. சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளை 145% லிருந்து 30% ஆகவும்,...

போப் லியோவின் பதவியேற்பு விழாவிற்காக ரோம் செல்கிறார் பிரதமர்

போப் லியோ XIV இன் பதவியேற்பு திருப்பலியில் கலந்து கொள்ளவும், வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கவும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ரோம் செல்கிறார். ஞாயிற்றுக்கிழமை போப்பின் முறையான பதவியேற்பு...

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை குறிவைக்கும் விக்டோரியா பொலிஸார்

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விக்டோரியா காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 11 ஆம் திகதி தொடங்கி...

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை குறிவைக்கும் விக்டோரியா பொலிஸார்

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விக்டோரியா காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 11 ஆம் திகதி தொடங்கி...

உக்ரைனில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த ஆஸ்திரேலியர் உயிரிழப்பு

உக்ரைனில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் ஒருவரும் முன்னாள் ராணுவ வீரருமான ஆஸ்திரேலிய நபர் ஒருவர் உயிரிழந்தார். அவர் Prevail Together board...