ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்ட தனியார் பாதுகாப்புப் படைகளின் எண்ணிக்கை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் இது கணிசமாக அதிகரித்து தற்போது 155,000 ஆக உள்ளது.
தற்போது பாடசாலைகள், பொது நூலகங்கள் என பல நிறுவனங்களில் தனியார் பாதுகாப்பு படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இங்கு குடிகாரர்களை கட்டுப்படுத்துவதே முதன்மையான எதிர்பார்ப்பு என அடையாளம் காணப்பட்டுள்ளது.
எனினும், அவுஸ்திரேலியாவில் இன்னும் சுமார் 8,000 தனியார் பாதுகாப்புப் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.