Newsபிரதமர் மோடி-எலான் மஸ்க் இடையே சந்திப்பு

பிரதமர் மோடி-எலான் மஸ்க் இடையே சந்திப்பு

-

அமெரிக்காவுக்கு இந்திய பிரதமர் மோடி உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ளார். அங்கு பிரதமர் மோடி அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின் போது வர்த்தகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் அமெரிக்க பாராளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.இந்த விஜயத்தின் போது நியூயோர்க்கில் பிரதமர் மோடி பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க்கை சந்தித்தார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து எலான் மஸ்க் தெரிவிக்கையில்,

‘இந்தியாவின் எதிர்காலம் பற்றி நான் நம்பமுடியாத அளவிற்கு உற்சாகமாக உள்ளேன். பிரதமர் மோடி இந்தியாவில் கணிசமான முதலீடுகளைச் செய்ய எங்களைத் தூண்டுவதால், இந்தியா மீது உண்மையிலேயே மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். நான் மோடியின் ரசிகன். இது ஒரு அருமையான சந்திப்பு. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்.

அவர் (பிரதமர் மோடி) இந்தியாவிற்கு சரியான விஷயங்களைச் செய்ய விரும்புகிறார் என்று என்னால் கூற முடியும். அவர் வெளிப்படையாக இருக்க விரும்புகிறார், புதிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறார். மேலும் அது இந்தியாவின் சாதகமாக இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறார்.

அடுத்த ஆண்டு மீண்டும் இந்தியாவுக்குச் செல்ல நான் தற்காலிகமாகத் திட்டமிட்டுள்ளேன். ஸ்டார்லிங்கை இந்தியாவிற்கும் கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கிறோம். ஸ்டார்லிங்க் இணையம், தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு நம்பமுடியாத அளவிற்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் காந்தியின் 420 கிலோ வெண்கல சிலை திருட்டு

மெல்பேர்ண் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமூக மையத்தில், மகாத்மா காந்தியின் வெண்கல சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.  426 கிலோ எடையுள்ள இந்த வெண்கல சிலையை,...

ரொக்க விகித உயர்விற்குப் பிறகு முக்கிய வங்கிகளின் வட்டி விகிதங்கள் எவ்வாறு மாறும்?

ரிசர்வ் வங்கி (RBA) வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, நான்கு முக்கிய வங்கிகளும் தங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு...

தனியார் பள்ளி கட்டணம் 6% உயர்வு

ஆஸ்திரேலியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் முந்தைய ஆண்டு பதிவு செய்யப்பட்ட தரவுகளை விட அதிகமாக உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு தனியார் பள்ளியில் 13 ஆண்டு பள்ளிக்...

விக்டோரியாவில் தொற்றுநோய் பரவல் – 20 இடங்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டில் இதுவரை விக்டோரியாவில் நான்கு தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மாநில சுகாதார...

மெல்பேர்ணில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு

மெல்பேர்ணில் நேற்று ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. வடமேற்கு மெல்பேர்ணின் Hillside புறநகர்ப் பகுதியில் உள்ள Penshurst Ctயில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச்...

ரொக்க விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் முடிவு

எதிர்பார்த்தது போலவே, ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்து, 3.85 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இன்று இதை அறிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய...