13 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் மாதத்தில் ஒரு நாளில் சிட்னியில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது.
இன்று காலை சிட்னியில் 5.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
டாஸ்மேனியா மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் இன்று இயல்பை விட குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கான்பராவில் இன்று காலை வெப்பநிலை மைனஸ் 7.2 டிகிரியாக பதிவாகியுள்ளது.
இது 2018 க்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை மற்றும் 1986 க்குப் பிறகு ஜூன் மாதத்தில் ஒரு நாளுக்குப் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலையாகும்.
இதற்கிடையில், தெற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல மாநிலங்களில் நாளை முதல் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.