அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் குழந்தை பராமரிப்பு மையங்களை நடத்துவோர் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வாரம் 1 வீதம் முதல் 10 வீதம் வரை கட்டணம் அதிகரிக்கப்படும் என பெற்றோருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பட்ஜெட்டில், ஜூலை முதல் தேதியில் இருந்து குழந்தை பராமரிப்பு கட்டண மானியம் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முன்மொழிந்தது.
இவ்வாறான நிலையில், முறையற்ற பலன்களை எதிர்பார்த்து சிறுவர் பராமரிப்பு நிலைய நடத்துநர்கள் சந்தர்ப்பவாத வழியில் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அதிகரித்து வரும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று குழந்தை பராமரிப்பு மைய உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர் – வாடகை கட்டணம் மற்றும் உணவு செலவுகள்.