Newsஅமெரிக்காவில் செயற்கை இறைச்சிக்கு அனுமதி

அமெரிக்காவில் செயற்கை இறைச்சிக்கு அனுமதி

-

உலகம் முழுவதும் இறைச்சியை உண்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது.

இறைச்சிக்காக விலங்குகளை கொல்லக்கூடாது என்று பல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே பல்வேறு நாடுகளில் மாட்டு இறைச்சியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றது.

விலங்குகளின் உயிரணுக்களில் இருந்து செயற்கை இறைச்சி உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சி குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றன. செயற்கை இறைச்சிக்கு அனுமதி வழங்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் இரண்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சி விற்பனைக்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோழி உயிரணுக்களில் இருந்து நேரடியாக வளர்க்கப்படும் இறைச்சியை விற்க அப்சைடு புட்ஸ், குட்மீட் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இதன்மூலம் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சியை நுகர்வோருக்கு வழங்க அனுமதிக்கும் 2-வது நாடு அமெரிக்கா ஆகும். ஏற்கனவே சிங்கப்பூரில் செயற்கை கோழி இறைச்சி விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஈட் ஜஸ்ட் நிறுவனம், சிங்கப்பூரில் செற்கை இறைச்சியை விற்கிறது. விலங்குகள் தசையில் இருந்து எடுக்கப்படும் செல்களை வைத்து ஆய்வுக் கூடங்களில் வளர்க்கப்படும் இந்த வகை இறைச்சியானது வளர்ப்பு இறைச்சி என்று வகைப்படுத்தப்படுகிறது.

கோழியின் செல்களை பிரித்தெடுத்து அவற்றுடன் சில சத்துப் பொருள்களை கலந்து ஆய்வகத்தில் செயற்கை இறைச்சி உருவாக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அப்சைடு புட்ஸ் நிறுவன தலைவர் உமா லவேட்டில் தெரிவிக்கையில் ,

‘அமெரிக்காவில் செயற்கை இறைச்சிக்கு ஒப்புதல் வழங்கி இருப்பது இறைச்சியை நமது மேசையில் சேர்க்கும் விதத்தை மாற்றும். இது மிகவும் நிலையான எதிர்காலத்தை நோக்கிய ஒரு மாபெரும் படியாகும். வாழ்க்கையை பாதுகாக்கும் ஒன்று’ என தெரிவித்துள்ளார்.

Latest news

கத்திகளை அகற்றுவதற்கான சலுகை காலத்தை அறிவித்தார் Machete

விக்டோரியா அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒரு எச்சரிக்கை உள்ளது, இதன் மூலம் கத்தியை வைத்திருப்பது, எடுத்துச் செல்வது அல்லது வாங்குவது சட்டவிரோதமானது. இந்த...

YouTube-இல் சாதனை படைத்துள்ளார் MrBeast

YouTuber MrBeast, 400 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று, Play பட்டனை அடைந்த உலகின் முதல் YouTuber என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதை YouTube தலைமை நிர்வாக அதிகாரி...

100 ஆசிரியர் அல்லாத வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ள NSW மாநிலம்

TAFE NSW நிறுவனத்தில் இருந்து சுமார் 100 ஆசிரியர் அல்லாத வேலைகளை நீக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வாரம் நியூ சவுத் வேல்ஸிற்கான போக்குவரத்து கிட்டத்தட்ட 1,000...

NSW-வில் ஏற்பட்ட விமான விபத்தில் ஒருவர் பலி

தென்மேற்கு நியூ சவுத் வேல்ஸில் நடந்த விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.  புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில், ஹேயிலிருந்து மேற்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள...

NSW-வில் ஏற்பட்ட விமான விபத்தில் ஒருவர் பலி

தென்மேற்கு நியூ சவுத் வேல்ஸில் நடந்த விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.  புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில், ஹேயிலிருந்து மேற்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள...

சிட்னி பொதுப் போக்குவரத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள கட்டணமில்லா நேரங்கள்

போக்குவரத்துத் தலைவர்கள் சிட்னி மற்றும் பிராந்திய வழித்தடங்களில் கட்டணமில்லா ரயில் பயணத்தை 54 மணிநேரமாக நீட்டித்துள்ளனர். பல மாதங்களாக போக்குவரத்து நெரிசல் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்குப் பிறகு,...