பெரும் குற்றவாளிகள் போலி மாணவர்களை மாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்து மோசடியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
இவர்களில் கணிசமானவர்கள் பாலியல் கடத்தலுக்கு பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த போலி மாணவர்கள் சிறு பாடப்பிரிவுகளில் பணியமர்த்தப்படுவதுடன், மாணவர் காலத்திலும் பின்னர் வேலை விசாக்கள் மூலமாகவும் அவர்களது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
உண்மையில் உயர்கல்வியை தொடர விரும்புபவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் மாணவர் வீசா வழங்கப்படுகிறதா என்பதைச் சரிபார்ப்பது அவசியமானது என்றும் தொடர்புடைய அறிக்கை கூறுகிறது.
ஜூலை முதல் தேதியில் இருந்து, இலங்கையில் பல மாணவர் விசா விதிகளும் கடுமையாக்கப்பட உள்ளன.