Sportsகின்னஸ் சாதனை படைத்த ரொனால்டோ

கின்னஸ் சாதனை படைத்த ரொனால்டோ

-

ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 14 ஆம் திகதி வரை ஜெர்மனில் இடம்பெறவுள்ளது.

இதற்கான தகுதி சுற்று போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜவிக்கில் நடந்த யூரோ தகுதி சுற்று போட்டி ஒன்றில் போர்ச்சுக்கல்- ஐஸ்லாந்து அணிகள் மோதின.

போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இதில் விளையாடினார்.

அவருக்கு இது 200-வது சர்வதேச போட்டியாகும். இதன் மூலம் ரொனால்டோ புதிய சாதனை படைத்தார். 200 சர்வதேச போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் ஆவார்.

போர்ச்சுக்கல் நாட்டுக்காக 200 போட்டிகளில் விளையாடிய 38 வயதான அவருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.

123- வது கோல் இந்த போட்டியில் போர்ச்சுக்கல் 1-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்தியது.

89-வது நிமிடத்தில் ரொனால்டோ இந்த கோலை அடித்தார். தனது 200 சர்வதேச போட்டியில் அவர் கோல் அடித்து முத்திரை பதித்தார்.

அவர் 123-வது சர்வதேச கோலை பதிவு செய்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக குவைத் வீரர் அல் முதாவா 196 சர்வதேச போட்டியில் விளையாடியுள்ளார்.

அர்ஜென்டினாவை சேர்ந்த உலகின் மற்றொரு முன்னணி கால்பந்தாட்ட வீரரான லியோனல் மெஸ்சி 175 சர்வதேச போட்டியில் பங்கேற்று 10-வது இடத்திலும், 103 கோல்கள் அடித்து 3-வது இடத்திலும் உள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...