Sports33-வது ஒலிம்பிக் போட்டி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

33-வது ஒலிம்பிக் போட்டி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

-

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அடுத்த ஆண்டு (2024) ஜூலை 26 ஆம் திகதி முதல் ஒகஸ்டு 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் பிரதான பங்கு வகிக்கும் ஒலிம்பிக் தீபம் தொடக்க விழாவின் போது போட்டி இடம்பெறும் மைதானத்தில் உள்ள பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது முக்கிய நிகழ்வாகும்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம், ஒலிம்பிக் போட்டி தோன்றிய கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி ஏற்றப்படுகிறது.

கிரீஸ் நாட்டில் 9 நாட்கள் பயணிக்கும் ஒலிம்பிக் தீபம் ஏதென்ஸ் சென்று அங்கிருந்து பெலோம் என்ற கப்பல் மூலம் பிரான்சின் மார்செய்ல் துறைமுகத்துக்கு மே 8 ஆம் திகதி சென்றடைகின்றது.

ஒலிம்பிக் தீபம் பயணிக்கும் விவரத்தை அறிவித்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டி அமைப்பு குழு தலைவர் டோனி எஸ்டான்குவெட் இது குறித்து தெரிவிக்கையில்,

‘2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது. ஏப்ரல் 16 ஆம் திகதி ஏற்றப்படும் ஒலிம்பிக் தீபம் மே 8 ஆம் திகதி பிரான்ஸ் வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் புரதான இடங்கள் உட்பட 400-க்கும் மேற்பட்ட நகரங்களில் 68 நாட்கள் ஒலிம்பிக் தீபம் பயணிக்கிறது.

அத்துடன் வெளிநாடுகளுக்கும் எடுத்து செல்லப்படும். ஒலிம்பிக் தீபத்தை எடுத்து செல்லும் நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

உலகின் ‘வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரர்’ விபத்தில் மரணம்

உலகின் வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை என்று நம்பப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் Fauja Singh, கார் மோதி உயிரிழந்தார். உயிரிழக்கும்போது அவருக்கு 114...

எஃகு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சி வருகிறது – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் பசுமை எஃகு (green steel) துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலிய இரும்புத் தாது உற்பத்தியாளர்களுக்கும் சீன...

விக்டோரியாவில் விமானத்தை கடத்த முயன்ற இளைஞனுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை

விக்டோரியாவில் விமானத்தைக் கடத்த முயன்ற மைனர் ஒருவரின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், விக்டோரியாவில் உள்ள Avalon விமான நிலையத்தில், 17 வயது இளைஞன்...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் போக்குவரத்துச் சட்டங்களில் புதிய மாற்றம்

ஜூலை 13 முதல் ஆஸ்திரேலிய மாநிலம் ஒன்றில் புதிய போக்குவரத்துச் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. தெற்கு ஆஸ்திரேலியாவில் மின்-ஸ்கூட்டர்கள் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்படுகின்றன. மேலும் மிதிவண்டி அல்லது மின்-ஸ்கூட்டர்களை ஓட்டுபவர்களுக்கு...