ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் போதிய சம்பளம் இல்லாத காரணத்தினால் 70 விமானிகள் சேவையில் இருந்து விலகியுள்ளனர்.
விமான சேவையில் 330 விமானிகள் இருக்க வேண்டும் என இலங்கை விமானிகள் மன்றம் ஒரு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
ஆனால் விமான போக்குவரத்து நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக தற்போது 250 பேரே சேவையில் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தென் கொரியாவுக்குச் செல்லவிருந்த இலங்கைத் தொழிலாளர்கள் விமானம் தாமதம் காரணமாக அந்த வாய்ப்பை இழந்த பல சம்பவங்கள் அண்மையில் பதிவாகியுள்ளன.
இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ள அவர்கள், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஓராண்டில் மட்டும், 70க்கும் மேற்பட்ட விமானிகள் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர், மற்றொரு குழு வெளியேறத் தயாராகி வருகிறது.
எனவே, தற்போது விமான ஓட்டிகள் பற்றாக்குறையால், அவசர காலத்தில் விமானிகளை நியமிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.