உக்ரைனுக்கு மேலும் 110 மில்லியன் டாலர்களை ராணுவ உதவியாக வழங்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.
மேலும், 28 கவச வாகனங்கள் உட்பட 70 ராணுவ வாகனங்கள் வழங்கப்பட உள்ளதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்தார்.
ஆஸ்திரேலியா ஏற்கனவே 650 மில்லியன் டாலர் மதிப்பிலான உதவியை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.
உக்ரைனுக்கு பீரங்கி குண்டுகள் மற்றும் உணவு உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் அல்பானீஸ் தெரிவித்தார்.
கடந்த வார இறுதியில் ரஷ்யாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி இந்த முடிவுக்குக் காரணம் அல்ல என்றும் பிரதமர் அல்பானீஸ் வலியுறுத்தியுள்ளார்.