காமன்வெல்த் வங்கியின் ஆன்லைன் வங்கிச் சேவைகள் சீர்குலைந்துள்ளன.
அதன்படி இன்று காலை முதல் கணக்கு இருப்பை சரிபார்த்தல் உள்ளிட்ட பல சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பல்பொருள் அங்காடிகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அட்டைகள் மூலம் பணம் செலுத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை சுமார் 3,000 பேர் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறை உணர்ந்துள்ளதாகவும், அதனை உடனடியாக திருத்திக் கொள்வதாகவும் காமன்வெல்த் வங்கி வலியுறுத்தியுள்ளது.