News36 ஆண்டுகளுக்கும் மேலாக இரட்டை சிசுக்களை சுமந்த ஆண் - அதிர்ச்சியில்...

36 ஆண்டுகளுக்கும் மேலாக இரட்டை சிசுக்களை சுமந்த ஆண் – அதிர்ச்சியில் மருத்துவர்கள்

-

நாக்பூரை சேர்ந்த நபர் ஒருவர் தான் கர்பமாக இருப்பதை அறியாமல் 36 ஆண்டுகளுக்கும் மேலாக இரட்டை சிசுவை தனது வயிற்றில் சுமந்து வாழ்ந்துள்ளார்.

நாக்பூரில் பிறந்த சஞ்சு பகத் அவரது பெரிய வயிற்றின் காரணமாக ‘கர்ப்பிணி’ என்று அவரது ஊர் மக்களால் கேலி கிண்டலுக்கு உள்ளானவர்.

உண்மையில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், 36 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது சொந்த இரட்டை உடன்பிறப்புகள் அவரது வயிற்றில் வாழ்ந்திருக்கிறார்கள்.

சஞ்சு பகத் சிறுவனாக இருந்தபோது, அவரது வயிறு மிகவும் சிறியதாக இருந்ததாகவும்,ஆனால் அவருக்கு 20 வயது ஆனபோது வயிறு வேகமாக வளர்ந்துள்ளது.

ஆனால் அதை கண்டுகொள்ளாத சஞ்சு பகத்,ஒரு கட்டத்தில் மூச்சு விடுவதற்கே பெரும் அவதிப்பட்டுள்ளார்.

பின்னர் வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்ட நிலையில் , முதலில் அவரது வயிற்றில் பெரிய கட்டி இருப்பதாக நினைத்த நிலையில்,பின்னர் அறுவை சிகிச்சையின் போது தான் தெரியவந்திருக்கிறது அவரது வயிற்றில் நிறைய எலும்புகள் மற்றும் சதைகள் வளர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர் பின்னர் உள்ளே பரிசோதித்தபோது கை,கால்கள், பிறப்புறுப்பின் சில பகுதிகள், தாடைகள் ஆகியவற்றைக் கண்டறிந்ததாக தெரிவித்துள்ளனர்.

அவரது வயிற்றில் கருவுக்குள் கரு உருவாகி இரட்டை ஆண் சிசு இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத் துறையில் மிகவும் அரிதான நிகழ்வு என தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து சஞ்சு பகத்திற்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டை சிசு அகற்றப்பட்ட நிலையில்,கிடைகப்பெற்ற கை கால்கள், தலை முடி, பிறப்புறுப்பு என உடற்பாகங்களை பார்க்க சஞ்சு பகத் மறுத்துவிட்டார்.

கடந்த 36 ஆண்டுகளுக்கு மேல் சஞ்சு பகத் தனது வயிற்றுக்குள் இரட்டை ஆண் சிசுவை சுமந்து வாழ்ந்துள்ளது மருத்துவத்துறையில் மிகவும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருவில் கரு என்பது மிகவும் அரிதான ஒன்று என்றும் இது லட்சத்தில் ஒருவருக்கு தான் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சஞ்சு பகத் நலமுடன் இருப்பதாகவும் தனது அன்றாட வேளைகளில் அவர் சிரமமின்றி ஈடுபட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...