News'டைட்டானிக்' மூழ்கிய கடல் பகுதி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

‘டைட்டானிக்’ மூழ்கிய கடல் பகுதி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

-

கடலுக்குள் உடைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை பார்க்க டைட்டன் என்ற மினி நீர்மூழ்கி கப்பலில் சென்ற கோடீஸ்வரர்கள் 5 பேர் கப்பல் வெடித்து பலியான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் டைட்டானிக் படம் எடுத்து புகழ்பெற்ற ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில் ‘டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திலேயே இந்த விபத்து நடந்து இருப்பது என்னை ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஏற்கனவே நான் அந்த பகுதியில் 33 முறை சென்று வந்து இருக்கிறேன்.

அங்கு எனக்கு கூட சில பயங்கரமான அனுபவங்கள் ஏற்பட்டன. அந்த பகுதியில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 500 கிலோமீற்றர் ஆழம் இருக்கும். அதனால் நீர்மூழ்கி கப்பல் மீது அதிகமான அழுத்தம் இருக்கும்.

அங்கு ஒவ்வொரு கணமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிறிய தவறு நடந்தாலும் அட்ரஸ் இல்லாமல் ஆகி விடுவோம்.

டைட்டானிக் கப்பல் மூழ்கிய பகுதியில் இனம்புரியாத அதீதமான ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் புதிய தொழில்நுட்பத்தில் சென்சார்ஸ் உள்ளன.

அதற்குள் இருக்கும் மனிதர்கள் விபத்தை முன்கூட்டியே கண்டுபிடித்து இருப்பார்கள். அதில் இருந்து கவனமாக வெளியேறும் வழிகளும் உள்ளன. ஆனாலும் எதிர்பாராமல் நீர்மூழ்கி கப்பல் வெடித்துவிட்டதால் அவர்கள் எல்லோரும் இறந்து விட்டனர்” என தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...