Sportsபெண்கள் ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலியா அசத்தல் வெற்றி

பெண்கள் ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலியா அசத்தல் வெற்றி

-

இங்கிலாந்து- அவுஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இடம்பெற்றது.

இதில் முதல் இன்னிங்சில் முறையே அவுஸ்திரேலியா 473 ஓட்டங்களும், இங்கிலாந்து 463 ஓட்டங்களும் எடுத்தன.

10 ஓட்டம் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 19 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 82 ஓட்டங்கள் எடுத்திருந்தது. போப் லிட்ச் பீல்ட், பெத் மூனி களத்தில் இருந்தனர்.

இதையடுத்து நேற்று நடைபெற்ற 4-வது நாளில் அவுஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்சில் 78.5 ஓவர்களில் 257 ஓட்டங்களில் ஒல் அவுட்டானது.

இதையடுத்து 268 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.

நேற்றைய 4-வது நாள் போட்டிநேர முடிவில் இங்கிலாந்து அணி 28 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியில் டேனி வியாட் 20 ஓட்டத்துடனும் கேட் கிராஸ் 5 ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து 5-வது நாள் போட்டி இன்று நடைபெற்றது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் அவுஸ்திரேலிய பெண்கள் அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

அவுஸ்திரேலிய தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

நன்றி தமிழன்

Latest news

சவுதி அரேபியாவில் கட்டப்பட்ட பிரம்மாண்ட கட்டிடம்

சவுதி அரேபியாவில் 50 பில்லியன் டொலர் மதிப்பில் 'முகாப்” என்ற திட்டமான உலகின் மிகப்பெரிய பிரமாண்டமான கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தலைநகர் ரியாத்தில் அமையவுள்ள இத்திட்டமானது...

ஒன்றே குலம் ஒருவனே தேவன் – தவெக இன் தலைவர் விஜய்

தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாட்டில் மேடையில் பேசிய குறித்த கட்சியின் தலைவர் விஜய், அரசியல் தொழில்நுட்பம் மட்டும் தான் மாற வேண்டுமா? அரசியல் மாறக்கூடாதா?...

ஆஸ்திரேலியா வருபவர்கள் இனி இந்த தொலைபேசிகளை கொண்டுவர வேண்டாம்

ஆஸ்திரேலியாவிற்கு இலத்திரனியல் சாதனங்களைக் கொண்டு வருவதற்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவல்கள் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆஸ்திரேலியாவில் 3G சேவைகள் முற்றாக...

கைதிகளால் நிரம்பி வழியும் ஆஸ்திரேலிய மாநில சிறைகள்

அதிக எண்ணிக்கையிலான கைதிகளை அவசர திட்டத்தின் கீழ் மாற்றுவதற்கு வடமாகாண அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அப்பகுதியில் வேகமாக அதிகரித்து வரும் சிறைவாசிகளின் எண்ணிக்கையால் ஏற்படும் அபாயங்களைக் கையாள்வதற்காகவே இந்த...

டிக்கெட் மோசடிகளில் சிக்க வேண்டாம் என ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் டிக்கெட் மோசடியால் ஆஸ்திரேலியர்கள் மில்லியன் கணக்கான டாலர்களை இழந்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முக்கிய...

குயின்ஸ்லாந்தின் 41வது பிரதமராக David Crisafulli பதவியேற்பு

சிறிது நேரத்திற்கு முன்பு, குயின்ஸ்லாந்து மாநில தேர்தலில் புதிய மாநில முதல்வராக David Crisafulli பதவியேற்றார். அதன்படி, குயின்ஸ்லாந்தின் 41வது பிரதமராக David Crisafulli பதிவுகளில் இணைகிறார். மாநிலத்தின்...