Newsவாடகைத் தாய் மூலம் பிறந்த கன்றுக்குட்டி!

வாடகைத் தாய் மூலம் பிறந்த கன்றுக்குட்டி!

-

நாட்டிலேயே முதல் முறையாக வாடகைத் தாய் முறையில் கன்றுகுட்டி ஒன்று பிறந்துள்ளது.

நாட்டிலேயே முதல்முறையாக திருப்பதியில் உள்ள தேவஸ்தான கோசாலையில் வளர்க்கப்படும் ஓங்கோல் பசு ஒன்று வாடகைத்தாய் போன்ற முறையில் சாகிவால் நாட்டு இனத்தை சேர்ந்த கிடாரி கன்று ஒன்றை பிரசவித்துள்ளது. அதற்கு பத்மாவதி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் இருந்து அதிக பால் உற்பத்தி கொடுக்கும் நாட்டு பசுக்கள் பலவற்றை தேவஸ்தான நிர்வாகம் திருப்பதியில் உள்ள தேவஸ்தான கோசாலைக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளது. உயர் ரக நாட்டு காளைகளின் விந்தணு மூலம் அவை கருத்தரிக்க செய்யப்பட்டன.

அந்த கருக்களை ஓங்கோல் போன்ற தென்னிந்திய உயர்ரக நாட்டு பசுக்களின் கர்ப்பப்பையில் செலுத்தி தேவஸ்தான கோசாலையில் வளர்த்து வருகின்றனர். இது போல் பத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் தற்போது தேவஸ்தான கோசாலையில் கர்ப்பமாக உள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் 324 உயர்ரக சாகிவால் கிடாரி கன்றுகளை கோசாலையில் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மேலும் 10 பசுக்கள் சாகிவால் இனத்தைச் சேர்ந்த கிடாரி கன்றுகளை ஈன்றெடுக்க உள்ளன.

தேவஸ்தானத்தின் கோசாலையில் தினமும் 4000 லிட்டர் பால் உற்பத்தி செய்யவும், 60 கிலோ உயர்ரக நாட்டு பசு வெண்ணை தயார் செய்யவும் தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் ஜகவர் ரெட்டி ஆலோசனையின் பேரில் திருமலை திருப்பதி தேவஸ்தானமும், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழகமும் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Latest news

Social Houses மீது ஆர்வம் குறைவாக உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் மத்திய அரசால் 2023 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட Social Houses தொடர்பான தரவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவு அறிக்கையை ஆஸ்திரேலிய சுகாதார மற்றும் நலன்புரி...

மெட்டா நிறுவனத்தின் கொள்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்த திட்டம்

Facebook, Instagram மற்றும் Whatsapp உள்ளிட்ட வலைத்தளங்களை இயக்கி வரும் சமூக ஊடகங்களில் ஒன்றான Meta நிறுவனம் சமீபத்தில் அதன் கொள்கையில் சில மாற்றங்கள் பற்றிய...

ஆஸ்திரேலியாவின் அடுத்த பிரதமர் பற்றி வெளியான தகவல்

அவுஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அடுத்த கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெறுவார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். எதிர்வரும் கூட்டாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றால், அவர்...

வார இறுதிக்கு தயாராகும் ஆஸ்திரேலியர்களுக்கான வானிலை அறிக்கை

இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குயின்ஸ்லாந்து மற்றும்...

வாழ்வில் ஒருமுறையேனும் பார்க்கவேண்டிய விக்டோரியா பூங்காக்கள்

விக்டோரியாவின் மிகவும் கவர்ச்சிகரமான சில தேசிய பூங்காக்கள் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நீங்கள் விக்டோரியாவில் வசிக்கிறீர்கள் என்றால், இந்த பூங்கா உங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது...

பயணியின் பொதியில் இருந்த முதலை தலை!

கனடா பிரஜை ஒருவரின் பயணப் பொதியில் 'முதலை மண்டை ஓடு' ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. குறித்த 32 வயதான கனேடியர் புதுடெல்லி விமான நிலையத்தில்...