Newsதெரியாத இலக்கத்தில் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்தால் இனி இதை செய்யுங்கள்

தெரியாத இலக்கத்தில் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்தால் இனி இதை செய்யுங்கள்

-

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுவரை வாட்ஸ்அப்பில் தெரியாத நபர்களிடமிருந்து உங்களுக்கு அழைப்பு வந்திருக்கிறதா? கடந்த சில நாட்களாக, வாட்ஸ்அப்பில் தெரியாத நபர்களிடமிருந்து அழைப்பு வருவதாக கூறும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன.

ஒரு காலத்தில் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அழைப்பு (Call) செய்வதே கடினமாகத்தான் இருக்கும். மேலும் இதற்கான கட்டணமும் அதிகம். ஆனால், இவை அனைத்தையும் இப்போது வாட்ஸ்அப் எளிதாக்கிவிட்டது.

ஆனால் சமீப காலமாக, வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு வியட்நாம், மலேசியா, கென்யா போன்ற நாடுகளில் உள்ள தெரியாத நபர்களிடமிருந்து வாட்ஸ்அப் அழைப்பு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் மூலம் சைபர்கிரைம் அதிகரித்து வருவதாக பிற நாடுகளிலும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்கு தீர்வாக மெட்டா நிறுவனம் ஹசைலன்ஸ் அன்நோன் காலர்ஸ்’ (Silence Unknown Callers) என்ற வசதியை அறிமுகப் படுத்தியுள்ளது.

இந்த வசதியில் ஏதாவது தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால், அதற்கான ரிங்டோன் எதுவும் உங்களுக்கு வராது. அதற்குப் பதிலாக அந்த அழைப்பு வந்ததற்கான தகவல் ஹநோட்டிபிகேஷன்’ பிரிவில் மட்டும் இருக்கும். இதன்மூலம் தெரியாத அழைப்புகளின் தொந்தரவுகளை நீங்கள் எளிதாகத் தவிர்க்கலாம்.

இந்த வசதிக்கு…

வாட்ஸ்அப்புக்குள் செல்லுங்கள்

வலது ஓரத்தில் இருக்கும் ‘மெனு’வை க்ளிக் செய்யுங்கள்

பிறகு ‘Settings > Privacy > Calls’-ஐ தேர்ந்தெடுங்கள்

Calls-ல் இருக்கும் Silence Unknown Callers-யை ‘enable’ செய்துவிடுங்கள்

இனி உங்களுக்கு எந்த தெரியாத வாட்ஸ்அப் போன்காலும் வராது மக்களே!

நன்றி தமிழன்

Latest news

Update செய்யுமாறு Apple பயனர்களுக்கு அறிவிப்புகள்

Apple கடந்த ஆண்டு iOS 18.6 புதுப்பிப்பை வெளியிட்டது, இதில் 29 அவசர பாதுகாப்பு திருத்தங்கள் அடங்கும். ஹேக்கர்களுக்கு தங்கள் தரவு வெளிப்படுவதைத் தவிர்க்க பயனர்கள் விரைவில்...

டிரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் சர்வதேச உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதரை நியமிக்க டொனால்ட் டிரம்ப் தவறியது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...