ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் குறிப்பிடத்தக்க சரிவை பதிவு செய்துள்ளது.
கடந்த ஏப்ரலில் இது 6.8 சதவீதமாக இருந்தது, ஆனால் மே மாதத்தில் 5.6 சதவீதமாக குறைந்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரலில் 9.5 சதவீதமாக இருந்த எரிபொருள் விலை மே மாதத்தில் 8 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும், கடந்த மாதம் பயண மற்றும் தங்குமிடக் கட்டணங்களிலும் குறைவு காணப்பட்டதாக புள்ளிவிபரப் பணியகம் தெரிவித்துள்ளது.
எனினும், வீட்டு வாடகை, உணவு, மதுபானம், தளபாடங்கள் ஆகியவற்றின் விலைகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
பணவீக்க வீழ்ச்சியால் அடுத்த வாரம் நடைபெறவுள்ள அடுத்த வட்டி விகித திருத்தத்தில் மக்களுக்கு ஓரளவு நிம்மதி கிடைக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.