Newsபிரதமரின் பெயரை மணமகன் மறந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

பிரதமரின் பெயரை மணமகன் மறந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

-

இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் காஜிபுர் மாவட்டம், சைத்பூர் நகர் அருகே நசீர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம் அவதார். இவரது மகன் சிவசங்கருக்கும் பசந்த் பட்டி கிராமத்தை சேர்ந்த ரஞ்சனா என்பவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அப்போது மணமகள் குடும்பத்தினர் மணமகன் சிவசங்கரிடம் இயல்பாக பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது மணமகள் ரஞ்சனாவின் தங்கை, மணமகனிடம் நமது நாட்டின் பிரதமர் யார் என்று கேளிவி கேட்க , பதில் தெரியாமல் மணமகன் சிவசங்கர் விழித்தார்.

பிரதமர் மோடியின் பிரபலமாக இருக்கும் நிலையில் அவரது பெயர்கூட மணமகனுக்கு தெரியவில்லையே என்று மணமகள் குடும்பத்தினர் குழப்பம் அடைந்தனர்.

இந்த தகவல் மணமகள் ரஞ்சனாவின் காதுக்கும் எட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பிரதமரின் பெயர்கூட தெரியாத நபரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறினார்.

அதன்பிறகு கிராமத்து தலைவர்கள் முன்னிலையில் இருவீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தி மணமகனின் தம்பி ஆனந்துக்கும் ரஞ்சனாவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

எனினும் ஆனந்தின் படிப்பறிவை சோதிக்க விரும்பிய மணமகள் வீட்டார், அவரிடம் சில பொது அறிவு கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர் தெளிவான பதில்களை அளித்தார்.

தொடர்ந்து ஆனந்துக்கும் ரஞ்சனாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த சூழலில் மணமகனின் தந்தை ராம் அவதார், துப்பாக்கியால் மிரட்டி எனது இளைய மகன் ஆனந்துக்கும் ரஞ்சனாவுக்கும் திருமணம் செய்து வைத்தனர். எனது மகன் ஆனந்த் திருமண வயதை எட்டவில்லை. அதற்கு முன்பே அவருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவிட்டனர் என்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் ‘இது விநோதமான வழக்கு. இதுதொடர்பாக இரு குடும்பத்தினரையும் அழைத்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையின் அடிப்படையில் பிரச்சினைக்கு சட்டப்பூர்வமாக தீர்வு காணப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

நன்றி தமிழன்

Latest news

டிரம்பின் கட்டணங்களை விட பெரிய பிரச்சனையாக உள்ள சர்வதேச மாணவர் கட்டுப்பாடுகள்

சர்வதேச மாணவர்கள் மீதான ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாடுகள் அமெரிக்க கட்டணங்களை விட பெரிய பிரச்சனையாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் வரிகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. பல ஆஸ்திரேலிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் Deepfake Photo செயலிகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பள்ளிகளுக்கு Nudify செயலிகள் குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் Deepfake படங்கள் பற்றிய அறிக்கைகள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக...

ஆஸ்திரேலிய பணியிடங்களில் அதிகரித்துள்ள சுய பரிசோதனை மருந்து கருவிகளுக்கான தேவை

ஆஸ்திரேலிய பணியிடங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால், தனிப்பட்ட போதைப்பொருள் சுய பரிசோதனை கருவிகளுக்கான தேவை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, cocaine,...

குயின்ஸ்லாந்து மிருகக்காட்சிசாலை சிங்கத்தால் கையை இழந்த பெண்

குயின்ஸ்லாந்து மிருகக்காட்சிசாலையில் சிங்கம் தாக்கியதில் 50 வயது பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் Toowoomba-இற்கு அருகிலுள்ள பிரபலமான...

பிரபல சமையல்காரர் Peter Russell-Clarke காலமானார்

அன்புடன் சமைக்கும் கலையைக் கற்றுக் கொடுத்த பிரபல சமையல்காரர் Peter Russell-Clarke காலமானார். அவர் இறக்கும் போது 89 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டது. Peter Russell-Clarke ஒரு சமையல்காரர்,...

சிறப்பு உணவுகளின் விலைகளை உயர்த்தும் இரு பெரிய பல்பொருள் அங்காடிகள்

Coles மற்றும் Woolworths-இல் விற்கப்படும் பிரபலமான பிரதான உணவான paprikaவின் விலை அதிகரிக்கப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதன்படி, எதிர்காலத்தில் மிளகுத்தூளின் மொத்த விலை சுமார்...