உலகளவில் சுமார் 700 மில்லியினுக்கும் அதிகமான பயனாளர்களை கொண்டுள்ளது டெலிகிராம் செயலி.
டெலிகிராமில் விரைவில் ஸ்டோரிஸ்/ஸ்டேடஸ் (stories/status) பதிவிடும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக அதன் நிறுவனர் துரோவ் அறிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பயனர்களின் அதிக விருப்பமுள்ள தேர்வு Stories Share செய்வது. அது வாட்ஸ் ஆப்-ஆக இருந்தால் ஸ்டேட்டஸ் (status) வடிவத்திலும், இன்ஸ்டாகிராமாக அல்லது பேஸ்புக் ஆக இருந்தால் ஸ்டோரி (Story) வடிவத்திலும் இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக போட்டி களத்தில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என டெலிகிராமும் இறங்கியுள்ளது.
இதன்படி செய்தியிடல் செயலியான டெலிகிராம் விரைவில் ஸ்டோரிகளை அறிமுகப்படுத்தும் என்று அதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் அறிவித்துள்ளார்.
இந்த சேவை தற்போது சோதனைக்கட்டத்தில் இருப்பதாகவும், அடுத்தமாதம் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார். அதோடு துரோவ் தனது டெலிகிராம் சேனலில், Stories தொடர்பாகவே அதிக கோரிக்கைகள் வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.