நியூ சவுத் வேல்ஸின் முன்னாள் பிரதமர் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான பல கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பொறுப்பு என்று விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஆணையம் முடிவு செய்துள்ளது.
2016-2017 காலப்பகுதியில் அவர் முன்னாள் லிபரல் எம்.பி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் இந்த முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் பிரதமராக இருந்த அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பல சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகளில் தலையிட்டதாக சுதந்திர விசாரணை ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை காட்டுகிறது.
இந்த அறிக்கையில் முன்னாள் பிரதமர் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய 18 பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு, இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
நியூ சவுத் வேல்ஸின் முன்னாள் பிரதமர் ஊழல் மற்றும் முறைகேடுகள் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்தார்.