Newsஅமெரிக்காவிற்கு 800 இந்தியர்களை அழைத்து சென்ற நபருக்கு நேர்ந்த கதி

அமெரிக்காவிற்கு 800 இந்தியர்களை அழைத்து சென்ற நபருக்கு நேர்ந்த கதி

-

அமெரிக்கா கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி நபர் ரஜிந்தர் பால் சிங் என்ற ஜஸ்பால் கில் (வயது 49). இவர், கனடா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக சுமார் 800 இந்தியர்களை அழைத்து சென்றதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இந்த செயலில் ஈடுபட்ட கும்பலில் முக்கிய நபராக விளங்கிய ஜஸ்பால் கில், அதன் மூலம் 5 இலட்சம் அமெரிக்க டொலர்கள் வரை ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன சவாரிக்கான உபேர் செயலியை பயன்படுத்தி, இந்தியர்களை அமெரிக்காவிற்குள் இவர் வாகனங்களில் அழைத்துச்சென்றதும் தெரியவந்துள்ளது. சுமார் 4 ஆண்டுகாலமாக இது இடம்பெற்று வந்துள்ளதாக அறியப்படுகின்றது.

கலிபோர்னியாவில் உள்ள ஜஸ்பால் கில்லின் வீட்டில் சோதனையிட்ட விசாரணை அதிகாரிகள், அங்கிருந்து 45 ஆயிரம் டொலர் ரொக்கம், போலியான ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட ஜஸ்பால் கில், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கோர்ட்டு, ஜஸ்பால் கில்லுக்கு 45 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

ஜஸ்பால் கில்லும் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத்தான் வசித்து வந்துள்ளார்.

எனவே ,அவர் சிறை தண்டனைக்குப் பிறகு அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி தமிழன்

Latest news

Social Houses மீது ஆர்வம் குறைவாக உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் மத்திய அரசால் 2023 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட Social Houses தொடர்பான தரவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவு அறிக்கையை ஆஸ்திரேலிய சுகாதார மற்றும் நலன்புரி...

மெட்டா நிறுவனத்தின் கொள்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்த திட்டம்

Facebook, Instagram மற்றும் Whatsapp உள்ளிட்ட வலைத்தளங்களை இயக்கி வரும் சமூக ஊடகங்களில் ஒன்றான Meta நிறுவனம் சமீபத்தில் அதன் கொள்கையில் சில மாற்றங்கள் பற்றிய...

ஆஸ்திரேலியாவின் அடுத்த பிரதமர் பற்றி வெளியான தகவல்

அவுஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அடுத்த கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெறுவார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். எதிர்வரும் கூட்டாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றால், அவர்...

வார இறுதிக்கு தயாராகும் ஆஸ்திரேலியர்களுக்கான வானிலை அறிக்கை

இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குயின்ஸ்லாந்து மற்றும்...

வார இறுதிக்கு தயாராகும் ஆஸ்திரேலியர்களுக்கான வானிலை அறிக்கை

இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குயின்ஸ்லாந்து மற்றும்...

வாழ்வில் ஒருமுறையேனும் பார்க்கவேண்டிய விக்டோரியா பூங்காக்கள்

விக்டோரியாவின் மிகவும் கவர்ச்சிகரமான சில தேசிய பூங்காக்கள் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நீங்கள் விக்டோரியாவில் வசிக்கிறீர்கள் என்றால், இந்த பூங்கா உங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது...