Newsஜப்பானில் இரத்த சிவப்பு நிறமாக மாறிய நதியால் அதிர்ச்சியில் பொதுமக்கள்

ஜப்பானில் இரத்த சிவப்பு நிறமாக மாறிய நதியால் அதிர்ச்சியில் பொதுமக்கள்

-

ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதி, திடீரென அடர் கருஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதை கண்ட மக்களும், பார்வையாளர்களும் அச்சமடைந்தனர்.

அங்குள்ள ஒரு மதுபான ஆலையில் உள்ள குளிரூட்டும் அமைப்பு ஒன்றில் இருந்து உணவில் நிறத்திற்காக சேர்க்கப்படும் சாயம் கசிந்ததால் நதியின் நிறம் மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் காலை 09:30 மணியளவில் கசிவு நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பீர் தயாரிப்பு ஆலையான ஓரியன் ப்ரூவரிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உணவுகளில் நிறத்திற்காக சேர்க்கப்படும் சாயம் ஆற்றில் கசிந்ததால் தண்ணீர் நிறம் மாறியதாகவும், இதனால் சுகாதார அபாயங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.

அதேசமயம், மிகப் பெரிய பிரச்சனை மற்றும் கவலையை ஏற்படுத்தியதற்காக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘எங்கள் தொழிற்சாலையில் குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் குளிரூட்டும் நீரில், உணவு சுகாதாரச் சட்டத்தின் அமலாக்க விதிமுறைகளில் பட்டியலிடப்பட்டுள்ள புரோபிலீன் கிளைகோல் எனப்படும் உணவு சேர்க்கைக்கான பொருள் இருக்கிறது.

குளிர்விக்கும் நீரில் உள்ள அது கசிந்ததும், அந்த நீர், மழைநீர் வடிகாலின் வழியாக நதியில் கலந்து நதி நீர் சிவப்பு நிறமாக மாறி விட்டது’ என்று ஓரியன் ப்ரூவரிஸ் கூறியுள்ளது.

கசிவு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக நிறுவனத்தின் தலைவர் ஹஜிம் முரானோ தெரிவித்தார்.

இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். அழகு சாதன தொழில்களில் பெருமளவில் பயன்படுத்தப்படும் இந்த பொருள் பொதுவாக பாதுகாப்பானது என்று அமெரிக்க நச்சுப் பொருட்கள் மற்றும் நோய்ப் பதிவேடு முகமை தெரிவித்துள்ளது.

தொழிற்சாலைகளால் இந்த ரசாயனம் குளிர்விக்கும் செயல்பாட்டில் உணவு சேர்க்கையாக பயன்படுத்தப்படுகிறது.

Latest news

குழந்தைகளுக்கு இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் கோவிட்-19 தடுப்பூசி

COVID-19 வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு இதய நோய் வருவதைத் தடுப்பதற்குப் பதிலாக, அவர்களின் இதய நோய் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கின்றன என்று ஒரு புதிய...

McDonald’s ஊழியர்கள் இப்போது கல்லூரி கிரெடிட்களையும் பெறலாம்!

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s, ஊழியர்கள் தங்கள் வேலைத் திறன்களைப் பயன்படுத்தி பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெறுவதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் micro-credentials...

செயலிழப்பிற்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்ட Optus சேவைகள்

நியூ சவுத் வேல்ஸின் Hunter பகுதியில் ஏற்பட்ட மின் தடைகளுக்குப் பிறகு சேவைகள் மீட்டமைக்கப்பட்டுள்ளதாக Optus கூறுகிறது. Hexham – Maitland சாலையில் உள்ள ஒரு மொபைல்...

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

மெல்பேர்ணில் டிராம் பயணிகளுக்கு ஒரு நற்செய்தி

மெல்பேர்ணின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் Mikey Card Reader புதுப்பிப்புகள் மற்றும் புதிய டிராம்களை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட பெரிய மாற்றங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. அதன்படி,...