கட்டணச் சலுகையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் குழந்தை பராமரிப்பு மையங்களின் செயல்பாடுகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார்.
ஆண்டு வருமானம் $530,000 வரை உள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு குழந்தை பராமரிப்பு கட்டண சலுகை ஜூலை 10 முதல் நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, $80,000 வரை சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெற்றோர்கள் 90 சதவிகிதம் வரை குழந்தை பராமரிப்பு கட்டண நிவாரணத்தை கோருவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.
இந்த முழு திட்டத்தின் மூலம் சுமார் 12 லட்சம் குடும்பங்கள் கட்டண நிவாரணம் பெறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சலுகையின் மூலம், சில குழந்தை பராமரிப்பு மைய உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்தியதாக ஏற்கனவே செய்திகள் வந்துள்ளன.
இதுகுறித்து, நுகர்வோர் ஆணையம் உன்னிப்பாக கண்காணித்து, சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது.