Newsடைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மனித உடல் சிதைவுகள் மீட்பு

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மனித உடல் சிதைவுகள் மீட்பு

-

கடலில் மூழ்கிய டைட்டனிக் கப்பலின் சிதைவைப் கண்டறிய 5 பேரை ஏற்றிச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் அண்மையில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பயணத்தை ஏற்பாடு செய்த Oceangate நிறுவனத்தின் தலைவர் ஸ்டொக்டன் ரஷ் (61) பிரிட்டிஷ் ஆய்வாளர் ஹமிஷ் ஹார்டிங், 58, பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ஷாஷதா தாவூத் (48), அவரது 19 வயது மகன் (19), மற்றும் மூத்த ஆய்வாளர் போல் ஹென்றி (77) ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், டைட்டன் கப்பலின் சில சிதைவுகள் நேற்று மீட்கப்பட்டதை அமெரிக்க கடலோர காவல்படை உறுதிப்படுத்தியது. இந்த பாகங்கள் கனடாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ் துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டன.

இன்று (29) சிதைவுகளை பரிசோதித்த போது மனித உடல் உறுப்புகள் என ஊகிக்கக்கூடியவை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...