News40 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த 6 வயது சிறுவன்

40 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த 6 வயது சிறுவன்

-

மெக்சிகோவில் உள்ள மாண்டேரி பகுதியில் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்கா ஒன்றுள்ளது.

இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஜிப்லைனில் சாகச பயணம் செய்து மகிழ்வார்கள். இந்நிலையில் கடந்த 25 ஆம் திகதி அங்கு சுற்றுலா சென்றவர்களில் 6 வயது சிறுவன் ஒருவன் ஜிப்லைனில் சாகச பயணம் செய்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தான்.

அதிர்ஷ்டவசமாக பூங்காவில் இருந்த செயற்கை குளத்தில் அந்த சிறுவன் விழுந்தான்.

உடனே அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் நீச்சல் குளத்துக்குள் குதித்து சிறுவனை காப்பாற்றினார்.

இதில் சிறுவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். எனினும் அவனுக்கு தேவையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

இதற்கிடையே அந்த சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்த்தவர்கள் பூங்காவை விமர்சனம் செய்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து பூங்காவில் சாகச சவாரி நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

சவுதி அரேபியாவில் கட்டப்பட்ட பிரம்மாண்ட கட்டிடம்

சவுதி அரேபியாவில் 50 பில்லியன் டொலர் மதிப்பில் 'முகாப்” என்ற திட்டமான உலகின் மிகப்பெரிய பிரமாண்டமான கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தலைநகர் ரியாத்தில் அமையவுள்ள இத்திட்டமானது...

ஒன்றே குலம் ஒருவனே தேவன் – தவெக இன் தலைவர் விஜய்

தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாட்டில் மேடையில் பேசிய குறித்த கட்சியின் தலைவர் விஜய், அரசியல் தொழில்நுட்பம் மட்டும் தான் மாற வேண்டுமா? அரசியல் மாறக்கூடாதா?...

ஆஸ்திரேலியா வருபவர்கள் இனி இந்த தொலைபேசிகளை கொண்டுவர வேண்டாம்

ஆஸ்திரேலியாவிற்கு இலத்திரனியல் சாதனங்களைக் கொண்டு வருவதற்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவல்கள் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆஸ்திரேலியாவில் 3G சேவைகள் முற்றாக...

கைதிகளால் நிரம்பி வழியும் ஆஸ்திரேலிய மாநில சிறைகள்

அதிக எண்ணிக்கையிலான கைதிகளை அவசர திட்டத்தின் கீழ் மாற்றுவதற்கு வடமாகாண அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அப்பகுதியில் வேகமாக அதிகரித்து வரும் சிறைவாசிகளின் எண்ணிக்கையால் ஏற்படும் அபாயங்களைக் கையாள்வதற்காகவே இந்த...

டிக்கெட் மோசடிகளில் சிக்க வேண்டாம் என ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் டிக்கெட் மோசடியால் ஆஸ்திரேலியர்கள் மில்லியன் கணக்கான டாலர்களை இழந்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முக்கிய...

குயின்ஸ்லாந்தின் 41வது பிரதமராக David Crisafulli பதவியேற்பு

சிறிது நேரத்திற்கு முன்பு, குயின்ஸ்லாந்து மாநில தேர்தலில் புதிய மாநில முதல்வராக David Crisafulli பதவியேற்றார். அதன்படி, குயின்ஸ்லாந்தின் 41வது பிரதமராக David Crisafulli பதிவுகளில் இணைகிறார். மாநிலத்தின்...